ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் 10-வது வார்டு மேற்கு தெருவில் தாரச்சாலை போடுவதற்காக மண் கொட்டப்பட்டு பல நாட்கள் ஆகியும் தற்போது வரை சாலை அமைக்கப்படவில்லை. மேலும் தற்போது பெய்து வரும் மழையால் அச்சாலையில் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தார்ச்சாலை அமைத்துதர வேண்டும்.