புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே உள்ள பாண்டி பத்திரம் கிராமத்திலிருந்து பிராந்தனி கிராமத்திற்கு செல்லும் சாலை மெட்டல் சாலையாகவும், மண் சாலையாகவும் காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.