சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம்

Update: 2025-11-23 10:10 GMT

கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியம் சின்னப்பனையூரில் இருந்து நெய்தலூர் வழியாக நங்கவரம் வரை தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக அரசு பஸ், பள்ளி வாகனம், இருசக்கர வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. இந்நிலையில் சின்னப்பனையூர் கடைவீதி பகுதியில் சாலையில் பல இடங்களில் பெரிய அளவிலான பள்ளங்கள் உள்ளன. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் வாகனத்தை விட்டு கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையில் உள்ள பள்ளத்தை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்