கரூர் மாவட்டம் நடையனூரில் இருந்து புகழூர் ரெயில்வே கேட் செல்லும் பாதை வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் புகழூர் ரெயில்வே கேட் முதல் பேச்சிப்பாறை செல்லும் தார்சாலை வரை கடந்த பல ஆண்டுகளாக மண்சாலையாக உள்ளது. இந்நிலையில் மழைக்காலங்களில் அதிகளவு மழை பெய்து வருவதால் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மண்சாலை வழியாக செல்லும்போது அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார்சாலையாக மாற்றியமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.