நாகர்கோவில் சவேரியார் கோவில் சந்திப்பில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சிலர் கழிவுநீரை வடிகால் ஓடையில் கலக்கும் வகையில் அமைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி மழைநீர் வடிகால் ஓடையில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.