தியாகதுருகம் அருகே தியாகை- வேங்கவாடி இடையே உள்ள சுமார் 4 கி.மீட்டர் தூரமுள்ள சாலையானது பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. சாலையில் உள்ள பள்ளங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.