ஜலகண்டாபுரம் அரசு மருத்துவ மனையில் இருந்து தாரமங்கலம்-மேட்டூர் செல்லும் வழித்தடத்தில் வண்டிமேடு, 4 ரோடு, கடை வீதியிலிருந்து பாடசாலை தெருவரை வேகத்தடை இல்லை. இந்நிலையில் வண்டிமேட்டில் இருந்து கடைவீதி செல்லும் வழியில் காலை, மாலை நேரங்களில் இரு சக்கர வாகனங்கள், கார்கள் வேகமாக செல்கின்றன. இதனால் பள்ளி மாணவர்கள், முதியோர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே இந்த இடங்களில் வேகத்தடை அமைத்து வர்ணம் பூச அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-முருகன், ஜலகண்டாபுரம்.