பாலம் சேதம்

Update: 2025-11-16 16:54 GMT

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதி டி.பி.கே சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு பாலிடெக்னிக்-பெயரியார் பஸ் நிலையம்  இடையே செல்லும் பாலத்தில் உள்ள சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக சேதமடைந்து பல்லாங்குழி போல் காட்சியளிக்கின்றது. இதனால் அப்பாலத்தில் இரவு நேரங்களில் பயணிக்கும்  இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர்.. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்தை தவிர்க்க பாலத்தை விரைந்து சீரமைத்து தர வேண்டும்.  

மேலும் செய்திகள்