சேந்தமங்கலம்-ராமநாதபுரம் புதூர் குறுக்கு சாலையில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் முன்பு சாலையின் குறுக்கே பள்ளம் காணப்படுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் தட்டு தடுமாறி சென்று வருகின்றனர். இதன் காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பள்ளிக்கு முன்பாக காணப்படும் ஆபத்தான பள்ளத்தை சீரமைத்து சாலை அமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?.
-ராதா, ராமநாதபுரம் புதூர்.