சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2025-11-16 14:05 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பல்லவராயன் பத்தை ஊராட்சியில் குளப்பன்பட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள ஆதிதிராவிடர் தெருவுக்கு செல்லும் சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. மழை பெய்யும் நேரங்களில் சேறும், சகதியுமாக மாறி நடந்து செல்வதற்கு கூட சிரமமாக இருக்கிறது. குண்டும், குழியுமான இந்த சாலையில் உள்ள பள்ளத்தில் தண்ணீர் தேங்கி சுகாதார கேட்டையும் உருவாக்குகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்