தஞ்சை கால்நடை பல்கலைக்கழகம், ஆராய்ச்சி மையம் எதிரே இந்திரா நகர்,பெரியார் நகர் பகுதி உள்ளது.இந்த பகுதியில் முறையான சாலை வசதி இல்லை. மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. தெரு விளக்கு வசதியும் இல்லாததால் . பொதுமக்கள் அச்சத்துடன் செல்லக்கூடிய நிலை உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து சாலை மற்றும் தெருவிளக்கு வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.