குண்டும், குழியுமான சாலை

Update: 2025-11-16 12:42 GMT

திருச்சி மாநகராட்சி செல்வ நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் வகையில் சாலையின் குறுக்கே அங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. ஆனால் இந்த பள்ளங்கள் சரி செய்யப்படாமல் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக மொபட்டில் செல்லும் பெண்கள் நிலை தடுமாறி கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்