பேராசையின் உச்சமே ஆக்கிரமிப்பு. அரசு இடம் என்றால் ஆக்கிரமிப்பு இல்லாமல் இல்லை. எப்படியும் ஒரு அடி நீளமாவது ஆக்கிரமித்து கொண்டால்தான் மனசாந்தி கிடைக்கும்போலும். அந்த வகையில், திருப்பூர் மாநகராடசி் 17-வது வார்டு கொங்கு மெயின் ரோடு எம்.எஸ். நகர் கருப்புராயன் கோவில் அருகே சாலையோர ஆக்கிரமிப்பின் காரணமாக அங்கு அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே சாலையோர ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.