மூலனூரில், கரூர்–-தாராபுரம் பிரதான சாலையில் அரசு மாதிரிப் பள்ளி அமைந்துள்ளது. பள்ளியின் முன்பு, சாலையில் குறுக்கே கேபிள் வயர்கள் அப்படியே கிடக்கின்றன. பள்ளி முடிந்து பஸ்சை பிடிக்க அவசரமாக செல்லும் மாணவ, மாணவிகள் வயரில் சிக்கி விழுந்து பாதிப்படையும் அபாயம் நிலவுகிறது. எனவே இந்த வயரை உடனே அகற்ற வேண்டும்.