அரியலூர் மாவட்டம் மு.புத்தூர் கிராமத்தில் உள்ள சுண்ணாம்புக்கல் சுரங்கத்திலிருந்து லாரிகள் வேகமாக போட்டி போட்டு செல்லும்போது லாரிகளிலிருந்து சுண்ணாம்பு கற்கள் தவறி சாலையில் விழுந்து விடுகிறது . இதை யாரும் அகற்றுவதில்லை .மேலும் வி.கைகாட்டியில் முட்டுவாஞ்சேரி சாலையில் மேம்பாலம் முதல் சாலை புழுதி படலமாகவே உள்ளது. அங்குள்ள சென்டர் மீடியனின் இருபுறமும் அதிகளவில் மண்கள் குவிந்து மேடாக உள்ளது . இவ்வழியே லாரிகள் செல்லும்போது தேங்கியுள்ள மண்கள் காற்றில் பறப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.