கரூர் மாவட்டம், புன்செய் தோட்டக்குறிச்சி மெயின் சாலையில் மிகவும் ஆபத்தான வளைவு உள்ளது. இந்த சாலை வழியாக கரூர் முதல் வேலூர் வரை செல்லும் நகர பஸ்கள், கனரக வாகனங்கள் அடிக்கடி சென்று வருகின்றன. இந்த வழியாக செல்லும் வாகனங்கள் வளைவு பகுதியில் வேகமாக செல்வதினால் அடிக்கடி விபத்து ஏற்படுவதுடன், இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே விபத்துகளை தடுக்கும் வகையில் இந்த வளைவு பகுதியில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.