அரியலூர் நகரில் சாலை ஓர கடைகளிலும், உணவு விடுதிகளிலும் உணவு தயாரிப்பதற்காக கழிவுநீர் வாய்க்கால்கள் மீது கியாஸ் மற்றும் விறகு அடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும், வாகனங்கள் செல்லும் சாலைகளிலும் எரிவாயு சிலிண்டர்கள் வைக்கப்பட்டு எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் உணவுகள் தயாரிக்கப்பட்டுகிறது. நகரில் பல சாலைகள் கொள்ளிடம் குடிநீர் இணைப்புக்காக பணிகள் நடைபெற்று வருவதால் சாலைகளில் வாகனங்கள் செல்லும்போது ஏற்படும் புழுதிகள் உணவுப் பொருட்கள் மீது படர்ந்து விடுகின்றன. இந்த உணவை அருந்துபவர்களுக்கு உடல் உபாதை ஏற்படுகின்றன. மேலும் சாலையோரம் வைக்கப்படும் கியாஸ் சிலிண்டர்களால் விபத்து அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.