ஆபத்தான வளைவு

Update: 2025-11-16 11:22 GMT

அரியலூர்-திருச்சி நெடுஞ்சாலையில் அம்மாக்குளம் பகுதியில் உள்ள வளைவு மிகவும் ஆபத்தானதாக உள்ளது. இப்பகுதியில் ஏராளமான வீடுகளும், கடைகளும், பள்ளிக்கூடமும் செயல்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதியில் அதிகளவு மாணவர்கள் சென்று வருகின்றனர். ஆனால் இந்த வளைவில் வரும் வாகனங்கள் வேகமாக வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே இப்பகுதியில் வேகத்தடை அமைத்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்