விபத்து அபாயம்

Update: 2025-11-16 10:52 GMT

பொள்ளாச்சி அருகே ஜமீன் ஊத்துக்குளி சீனிவாசபுரம் ரெயில்வே பாலம் அருகில் சாலையின் நடுவே பதிக்கப்பட்ட குழாய் உடைந்து குடிநீர் வெளியேறி வருகிறது. இதனால் சாலையில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இதனால் பள்ளம் விரிவடைந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளதோடு விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சரி செய்து, சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்