மணிக்கட்டிபொட்டல் பகுதியில் இருந்து காற்றாடித்தட்டு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையில் பல பள்ளி வாகனங்கள் சென்று வருகின்றன. சாலை சேதமடைந்து காணப்படுவதால் , அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகள் நலன்கருதி சேதமடைந்து காணப்படும் சாலையை சிரமைக்க சமந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரெத்தினபூபதி, மணிக்கட்டிபொட்டல்.