திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே பிச்சாண்டார்கோவில் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சாலை முற்றிலும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. தற்போது மழை பெய்யும் போது, சாலையில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும், இப்பகுதியில் சேகரமாகும் குப்பைகள் சாலையோரம் கொட்டப்படுவதால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடுட ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.