சங்கராபுரம் அருகே நெடுமானூர் ஏரிக்கரையில் இருந்து செங்குட்டை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் விவசாயிகள், பள்ளி மாணவர்கள், பால் உற்பத்தியாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.