திருச்சி எடமலைப்பட்டிபுதூர் செல்லும் சாலையின் நடுவே பாதாள சாக்கடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டால் அதனை சரி செய்யும் வகையில் இரும்பு தகடாலான மூடி அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் இந்த பாதாள சாக்கடையின் மூடி மீது ஏறி இறங்குவதால் தற்போது பாதாள சாக்கடை மூடி சற்று விலகி காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.