திருச்சி கோர்ட்டு அருகே சாலையோரத்தில் பாதசாரிகள் நடந்து செல்லும் வகையில் கழிவுநீர் வாய்க்கால் மீது சிலாப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலாப்புகள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால், தற்போது ஒரு சிலாப் சிதிலமடைந்து பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்த நடைபாதை வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் இந்த பள்ளத்தில் தவறிவிழும் நிலை உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நடைபாதையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.