ஏற்காட்டில் மிக முக்கிய சாலையாக விளங்கும் அரசு மருத்துவமனை செல்லும் சாலையில் நீதிமன்றம், தாசில்தார் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், மின்வாரிய அலுவலகம் போன்ற முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ளன. ஆனால் இந்த சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் மற்றும் நோயாளிகள் செல்லும் போது கூட நோயாளிகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சரி செய்ய வேண்டும்.
-ஊர் பொதுமக்கள், ஏற்காடு.