சங்ககிரி அருகே சின்னப்பம்பட்டி-கொங்கணாபுரம் செல்லும் வழியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் அபாயகரமான பகுதிகளில் இரும்பு தடுப்புகள் மற்றும் தடுப்பு கல் ஆகியவை பொருத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் சாலை பணிகள் காரணமாக நிறைய மின்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளதால் இரவு நேரங்களில் போதுமான மின் வெளிச்சம் இல்லை. மேலும் தடுப்புகளின் மீது வாகனங்கள் மோதி விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அனைத்து பகுதிகளிலும் உள்ள தட்டுப்புகளின் மீதும் ஒளிரும் விளக்குகள் அவசியம் பொருத்த வேண்டும்.