புஞ்சைபுளியம்பட்டி அருகே புதுப்பாளையத்தில் உள்ள மண் சாலை மழை காலத்தில் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இந்த சாலை வழியாகத்தான் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் சென்று வரும் நிலை உள்ளது. இதனால் அவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். தார்சாலை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?