கரூர் மாவட்டம், மலையம்பாளையம் ஊருக்கு செல்லும் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால், சிதிலமடைந்து ஆங்காங்கே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் இந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுவதுடன், இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருவதாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.