பாபநாசம் பகுதி வடபாதி அருகே கொக்கோி கிராமத்தில் சாலை உள்ளது. இந்த சாலை முறையான பராமரிப்பின்றி குண்டும்,குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனேவ, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.