அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் அரியலூரில் இருந்து காரைக்குறிச்சி வரை செல்லும் சாலையில் ஸ்ரீபுரந்தான் செக்கடி தெருவில் இருந்து கல்லடி தெரு வரை உள்ள சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளம் உள்ள சாலை சிதிலமடைந்து மிகவும் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.