புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் ராயவரம் ஊராட்சிக்குட்பட்ட புதுமனை 1-ம் வீதி மற்றும் 2-ம் வீதிகளில் உள்ள சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதையடுத்து இப்பகுதி மக்களின் கோரிக்கையை அடுத்து 1-ம் வீதியில் புதிதாக தார்சாலை போடப்பட்டது. ஆனால் இன்னும் 2-ம் வீதியில் சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் தான் உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் புதிதாக தார்சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.