சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் சிலர் அதிவேகத்தில் மோட்டார்சைக்கிள்களில் பயணிக்கின்றனர். இவ்வாறு பயணிப்பவர்களால் மற்ற வாகனஓட்டிகள், நடைபாதையினர் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே வாகனத்தில் அதிவேகத்தில் பயணிப்போர் மீது போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.