ஆற்றூர் சந்திப்பில் இருந்து குட்டைக்குழிக்கு செல்லும் சாலை உள்ளது. குட்டைக்குழி பகுதியில் அரசு மருத்துவமனை, பள்ளிகள் உள்ளதால் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கர்ப்பிணிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழை நேரங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன், அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அகஸ்டின், ஆற்றூர்.