கோவை மாநகராட்சி 87-வது வார்டுக்கு உட்பட்ட குனியமுத்தூர் பாரதி நகர் பகுதியில் மழைநீர் வடிகால் இல்லை. இங்கு மழை பெய்யும்போது சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் உள்பட பல்வேறு தேவைகளுக்காக நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். அத்துடன் இருசக்கர வாகனங்களில் செல்வோரும் மிகுந்த சிரமப்படுகிறார்கள். அவர்கள் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. மேலும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பலமுறை மனுக்கள் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடனடியாக மழைநீர் வடிகால் அமைத்து தர வேண்டும்.