விக்கிரவாண்டி வடக்கு புறவழிச்சாலையில் மேம்பால பணி நடைபெற்று வருவதால் சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் சர்வீஸ் சாலையில் செல்கிறது. தற்போது இந்த சாலையானது பலத்த சேதமடைந்துள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.