கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் பகுதி கிருஷ்ணாபுரம் அருகே அன்புநகர், எஸ்.எஸ்.நகர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலை பராமரிப்பின்றி உள்ளது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் நடந்த செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், அந்த வழியாக செல்லும் கனரக வாகனங்கள் சேற்றில் சிக்கிக்கொள்கின்றன. எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.