மயிலாடுதுறை காசி விஸ்வநாதர் கோவில் எதிரே காவிரி ஆற்றின் அருகே சாலை உள்ளது. இந்த சாலையில் உள்ள பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறுகிறது. கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் பக்தர்கள், பொதுமக்கள் அந்த வழியாக மூக்கை மூடியபடி சென்று வருகின்றனர். மேலும், கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.