மாடுகள் தொல்லை

Update: 2025-11-02 14:00 GMT

திருச்சி மாவட்டம் உறையூரில் இருந்து குழுமணி செல்லும் சாலையில் லிங்கம் நகர், பழனியப்பா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மாலை நேரங்களில் மாடுகள் சாலையை ஆக்கிரமித்தவாறு சுற்றித்திரிகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் சாலையில் படுத்துக்கொள்வதால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் சிலர் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்