பள்ளத்தை சரிசெய்ய வேண்டுகோள்

Update: 2025-11-02 13:10 GMT

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் இருந்து ராஜபுரம் செல்லும் வழியில் கொத்தப்பாளையம் ரோடு பிரிவு சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த வழியாக வாகனங்களில் செல்வோர் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் இந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனங்களை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்