அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியை அடுத்த சென்னை-கும்பகோணம் சாலையில் உள்ள கைலாசபுரம் மற்றும் வீரபோகம் கிராமங்களுக்கு செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கடந்த சில வருடங்களாகவே இந்த சாலை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு குண்டும், குழியுமாக இருப்பதால், இந்த சாலை வழியாக தினமும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.