புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா புலியூர் ஊராட்சி நல்லதங்காள்பட்டி வழியாக கீரனூர் கிள்ளுக்கோட்டை பிரிவு சாலையில் இருந்து புலியூர் வரை செல்லும் 4 கி.மீ. நீளம் உள்ள தார்சாலை மிகவும் மோசமான நிலையில் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.