திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில், வள்ளல் நகர் 6-வது குறுக்குத் தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் வசித்து வருகிறார்கள். அங்குள்ள சாலைகள் மிகவும் சேதமடைந்து மழைக்காலம் வந்தாலே சேறும் சகதியுமான காட்சியளிக்கிறது. குறிப்பாக வாகன ஓட்டிகள், பள்ளி செல்லும் குழந்தைகள் என அனைவருக்கும் இதனால் சிரமம் அடைகிறார்கள். இந்த தரமற்ற சாலையால் விபத்துகளும் அவ்வப்போது ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் சேறும் சகதியுமான சாலையை புதுப்பிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.