பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலத்தில் இருந்து ஆலத்தூர் செல்லும் குறுக்கு சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் முற்றிலும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இவ்வழியாக செல்லும் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிதாக தார்சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.