புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே உள்ள தொண்டைமான்ஊரணி ஊராட்சிக்கு உட்பட்ட இந்திராநகரில் இருந்து ராஜாபகதூர் வரை உள்ள ஒரு கிலோமீட்டர் நீளம் உள்ள தார்சாலை மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து, கப்பிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் நடந்து செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.