கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையில் நகராட்சி அலுவலகம் அருகே தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் இணையும் இடத்தில் பொதுமக்கள் சாலையை கடக்கும் பகுதியை குறிக்கும் வெள்ளை கோடுகள் வரையப்படாமல் உள்ளது. இதனால் காலை மற்றும் மாலை நேரத்தில் பள்ளி மாணவர்கள் சாலையை கடக்க முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் ஊட்டியில் இருந்து வரும் வாகனங்கள் வளைவான பகுதியில் நிறுத்தப்படுவதால் ஓவேலிக்கு செல்லும் வாகனங்கள் செல்ல வழி இல்லாமல் நடுரோட்டில் நிறுத்தப்பட வேண்டி உள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமா?.