புத்தளம் பேரூராட்சிக்குட்பட்ட வடக்கு தேரிவிளை வழியாக தெற்கு தேரிவிளை, அம்பலபதி உள்ளிட்ட பல ஊர்களுக்கு மக்கள் நடந்து செல்கிறார்கள். அதிகாலை முதல் இரவு வரை பள்ளி மாணவர்கள், பெரியவர்கள் என அனைவரும் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், மழை நேரங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி குளம்போல் காணப்படுவதால் மாணவர்கள், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.