பேயன்குழியில் இருந்து வில்லுக்குறிக்கு செல்லும் ரெயில் தண்டவாளம் இரட்டைகரை கால்வாய் பகுதியில் புதியதாக பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலம் கட்டப்பட்டாலும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், பள்ளி மாணவ-மாணவிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், இருசக்கர வாகனத்தில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.