திருச்சி பொன்மலை கோட்டத்திற்குட்பட்ட 44-வது வார்டு எஸ்.ஐ.டி. ஆயில் மில் செல்லும் பிரதான சாலையில் மாஜி ராணுவ காலனி நால்ரோடு அருகில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இவ்வழியாக நடந்து செல்லும் பாதசாரிகள் மற்றும் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.