சேதமான சாலை

Update: 2026-02-15 11:58 GMT

சேலம் 2-வது அக்ரகாரம் காசிவிஸ்வநாதர் கோவில் எதிரே மெயின் ரோடு செல்கிறது. இந்த சாலை சேதமாகி குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் சாலையில் ஆங்காங்கே பள்ளம், பள்ளமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்