சாலையோர பள்ளம் சரிசெய்யப்படுமா?

Update: 2026-02-15 11:13 GMT

கரூர் அருகே பெரிய குளத்துப்பாளையம் பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்காக சாலையோரம் குழாய் பதிக்கப்பட்டது. இதற்காக குழிகள் தோண்டப்பட்ட நிலையில், குழிகள் சரிவர மூடப்படாமல் உள்ளது. இதனால் இந்த சாலையில் ஒரே நேரத்தில் இரண்டு வாகனம் வரும்போது, குழிக்குள் வாகனம் சிக்கிக்கொள்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையோர பள்ளத்தை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்